search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்"

    • ஸ்கிரம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 400X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்து 996, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400 போன்றே ஸ்கிராம்ப்ளர் 400X மாடலும் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலிலும் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள், ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் உயரமான ஸ்டான்ஸ், ஹெட்லைட் கிரில், ஸ்ப்லிட் சீட், ஹேண்டில்பார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

     

    டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்.பி. பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. லைட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் வழங்கப்பட்டு உள்ளது.

    • டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • எல்இடி லைட்டிங் தவிர இந்த மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது.

    டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மாடல்களை கடந்த மாதம் அறிவித்த நிலையில், டிரையம்ப் இந்தியா நிறுவனம் ஸ்பீடு 400 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் ரெட்ரோ-மாடன் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.

    இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி இன்டிகேட்டர்கள், அகலமான ஹேன்டில்பார், நட் வடிவ ஃபியூவல் டேன்க் உள்ளது. இத்துடன் ஒற்றை பீஸ் சீட், டியுபுலர் கிராப் ரெயில், அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

     

    எல்இடி லைட்டிங் தவிர இந்த மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துன் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். 

    • ஸ்கிராம்ப்லர் 400X மாடல், வழக்கமான ஸ்கிராம்ப்லர் மாடல் போன்று காட்சியளிக்கவில்லை.
    • இரு மாடல்களிலும் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிவித்து இருக்கிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் உற்பத்தி இந்தியாவிலேயே நடைபெற இருக்கிறது.

    இரண்டு 400சிசி மோட்டார்சைக்கிள்களும் தோற்றத்தில் மிகவும் புதிதாக காட்சியளிக்கின்றன. அதனிநவீன தோற்றம் கொண்ட இந்த மாடல்களில் ஸ்பீடு 400 மட்டும் ஸ்பீடு டுவின் 900 போன்று காட்சியளிக்கிறது. ஸ்கிராம்ப்லர் 400X மாடல், வழக்கமான ஸ்கிராம்ப்லர் மாடல் போன்று காட்சியளிக்கவில்லை. இதன் சஸ்பென்ஷன் ஸ்பீடு 400 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் ஹேன்ட் கார்டுகள், ஸ்ப்லிட் சீட்கள் மற்றும் வித்தியாசமான எக்சாஸ்ட் உள்ளது. இரு மாடல்களிலும் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மாடல்களில் 43mm பிஸ்டன், 150mm டிராவல், மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், எல்இடி லைட்கள், பார்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

     

    டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் கார்னிவல் ரெட், கேஸ்பியன் புளூ மற்றும் ஃபேன்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கிராம்ப்லர் 400X மாடல் காக்கி கிரீன், கார்னிவல் ரெட் மற்றும் ஃபேன்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஜூலை 5-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. வினியோகம் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.

    • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது.
    • புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விற்பனை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே நடைபெற இருக்கிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மொத்தத்தில் எட்டு லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை அனைத்திலும் க்ரோம் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    க்ரோம் எடிஷன்கள் ராக்கெட் மற்றும் போன்வில் ரக மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷன் மாடல்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். எனினும், லிமிடெட் எடிஷன் மாடல்கள் மொத்தத்தில் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து டிரையம்ப் நிறுவனம் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    புதிய லிமிடெட் எடிஷன் க்ரோம் மாடல்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சந்தையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. க்ரோம் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை உருவாக்க புது வொர்க்‌ஷாப் அமைக்கப்பட்டு இருப்பதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடலில் கூடுதல் அக்சஸரிக்கள் மற்றும் பைக்கை சுற்றி க்ரோம் பினிஷ் செய்யப்படுகிறது.

    க்ரோம் பினிஷ் செய்யப்பட்ட லிமிடெட் எடிஷன் சீரிசில் விலை உயர்ந்த ராக்கெட் 3 ஜிடி மாடலில் பியூவல் டேன்க் க்ரோம் பினிஷ் மற்றும் ரெட் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஜெட்-பிளாக் ஹெட்லைட், ஃபிளை ஸ்கிரீன், முன்புற மட்கார்ட், ரேடியேட்டர் கௌல்கள், சைடு பேனல்கள், ரியர் பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 21 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ராக்கெட் 3 மாடலிலும் க்ரோம் பியூவல் டேன்க், பிளாக் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பிளாக் ஃபிளை ஸ்கிரீன், ஹெட்லைட் கௌல்கள், முன்புற மட்கார்ட், ரேடியேட்டர் கௌல்கள், சைடு பேனல்கள் மற்றும் ரியர் பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 20 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

    போன்வில் டி120 க்ரோம் எடிஷனில் க்ரோம் டேன்க், புளூ அக்செண்ட்கள், பிளாக் மட்கார்ட், சைடு பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 11 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். இதன் பாபர் மாடலிலும் க்ரோம் பியூவல் டேன்க், பிளாக் அக்செண்ட்கள், 3டி டிரையம்ப் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பேன்வில் ஸ்பீடுமாஸ்டர் க்ரோம் எடிஷன் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். இதில் க்ரோம் பியூவல் டேன்க் மற்றும் ரெட் சரவுண்ட்கள் செய்யப்பட்டுள்ளது. போன்வில் டி100 மாடலில் புளூ பியூவல் டேன்க், க்ரோம் மெட்டல் ஸ்ட்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் க்ரோம் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்பீடு ட்வின் 900 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 900 மாடல்களின் விலை முறையே ரூ. 8 லட்சத்து 84 ஆயிரம், ரூ. 9 லட்சத்து 94 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனேவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்குகிறது.

    • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள் உள்ளன.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2023 போன்வில் T120 பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 போன்வில் T120 பிளாக் எடிஷன் - சபையர் பிளாக், மேட் சபையர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பெயிண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஜெட் பிளாக் நிற வேரியண்ட் உடன் இணைகிறது. ஜெட் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். இதன் சபையர் பிளாக், மேட் சபையர் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதன் அம்சங்கள் போன்வில் T120 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இதில் 1200 சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 78.9 ஹெச்.பி. பவர், 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹார்டுவேரை பொருத்தவரை கிராடில் பிரேம், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், முன்புறம் டூயல் டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

    ×